90 சதவிகிதம் நாத்திகன்..!!
கடவுள், பேய்,
சடங்கு,சாஸ்திரம்,
சம்பிரதாயம், வாஸ்து,
புராணம், இதிகாசம்,
ஜாதகம், குறி,
செய்வினை, பரிகாரம்
எல்லாமே பச்சைஅயோக்கியத்தனம் ...
ஒரு சித்திரை பின்னிரவு நிலவொளியில்
பெருமீசை வைத்த கோடங்கியின்
"நல்லகாலம் பொறக்குது .... குடு குடு குடு"
ஆரூடத்தின் அடுத்த பகல்பொழுதின்
தேர்திருவிழாவில்,
"ரெண்டு முழம் மல்லிபூ,
ஒரு ரோஜா மொக்கு"
என்று வாங்கிக்கொண்டு இருந்தாய்!
குடுகுப்பையை தவிர
எல்லாமே பச்சைஅயோக்கியத்தனம் ..!

No comments:
Post a Comment