Saturday, July 5, 2014

அடையாளம்

நாமமும் பட்டையுமோ ரடையாலமென்  றதனைத்துறந்து
தொப்பியுந் தாடியுமோ ரடையாலமென் றதனையுந்துறந்து
வெள்ளங்கிச்  சிலுவையும் அல்லேலூயா வேதமும்
ருத்திராசைக் காவியும் கொண்டைமுடி மந்திரமும்
தாடியற்ற மீசையும் மீசையொடு தாடியும்
எல்லாமோ ரடையாலமென் றனைத்துந் துறந்து

*கருவில் தரித்த திருவுங் கொண்டு
*ஆடையின்றி வாடைமெலிந்து கையதுகொண்டு மெய்யதுபொத்தி
*நல்லதைக் கொண்டு அல்லதைத் தள்ளி
*இறுதி வறினும் உறுதி கூறி
*பணி மூப்பு சாக்காடு வென்று
*ஆக்கி யளித்து அளித்துப் புரந்து
*பூதலமும் மீதலமும் போற்ற

புரவியேறி வருகையிலே புதியதொரு ஞானம்
அடையாளந் துறத்த லின்னுமோ ரடையாளம்


சக்திவேல் லோகநாதன்


* - தமிழில் பயன்படுத்தப்படும் தொடர்ச் சொற்கள் -