Sunday, September 25, 2011

இந்திய தேசிய தியாகிகள் பதில் சொல்வார்களா ??

டக்லஸ் தேவானந்தாவை கைதுசெய்ய முடியாதாம், நட்புநாடுகளின் உறவுகள் பாதிக்குமாம் மத்திய அரசு சொல்லிவிட்டது, இதே டக்லஸ் ஒரு பாமரனை கொன்றதுக்கு பாதிலாக ராஜீவ்கானை (ராஜீவ் காந்தி ?) கொன்றிருந்தால் இதே காரணத்தால் விடுவீர்களா?. பாமரன் உயிர் வேறு ராஜீவ் உயிர் வேறா ?? அப்புறம் என்ன வெங்காயம் அது "சட்டத்தின் முன்அனைவரும் சமம்"

சிவராசனும் தனுவும் இப்போது தேவானந்தா போல இருந்தால் நட்புநாடுகளின் உறவுகள் பாதிக்கும் என்று விட்டுவிடுவீர்களா ??

எந்த காலத்திலும் தூக்கு தண்டனை இறந்தவனின்/குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக நிலையை பொறுத்துதான்அமைகிறது என்ற நீதிபதி "தாமஸ்"இன் வார்த்தைகளுக்கு இதைவிட எந்த சாட்சியும் வேண்டாம் ...


இந்த மக்கள் மன்னன் ராஜீவ்கானால் கொல்லப்பட்ட5000 சீக்கியர்களின் கொலைக்காக தூக்கு தண்டனை பெறப்பட்டகாங்கிரஸ் கழிசடைகள் எத்தனைபேர் (வாக்காளர் பட்டியலை பார்த்து சீக்கியர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் கொல்லபட்டார்கள்)?. யாருமில்லை !! கொன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதாலா?? அல்லது இறந்தவர்கள் அப்பாவிகள் என்றதாலா ??....

"மரம் விழும்போது நிலம் அதிருவது போல 5000 பேர் மரணமும் ஒரு சம்பவம், அவ்வளவே.!" இது ராஜீவ்கான் சொன்னது.இந்திரா மரணமும் ஒரு சாதாரண சம்பவம் என்று சொல்வாரா?, இல்லை, மக்கள் உயிருக்கு உங்கள் ராஜீவ்கான் தந்த மரியாதை (!!) அதுதான்)


http://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots


போபால் விசவாயுவினால் 25000 பேர் கொல்லப்பட்டதற்கு எத்தனை பேருக்கு தூக்கு வந்தது? யாருக்கும் இல்லை. ஏன்? கொன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதாலா?? அல்லது இறந்தவர்கள் அப்பாவிகள் என்றதாலா ??.... அதே ஆண்டர்சனை, ராஜீவ் மிகுந்த பாதுகாப்போடு டெல்லி வரை கொண்டு சென்று விமானம் ஏற்றிவிட்டாரா இல்லையா ?. இதுதான் உங்கள்தலைவர் உங்கள் மீது வைத்த பாசம் (!!?)...


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=16640


ராஜீவ் கொலையை முழுமையாக விசாரிக்கவ வேண்டும் என்ற ஜெயின் கமிசனை மிரட்டியது காங்கிரசா இல்லையா??. விசாரிக்க தேவையான முக்கிய கோப்புகளை ஜெயின் கமிசனிடம் தராமல் மறைத்தது காங்கிரசா இல்லையா ??


அதை தேட ஒரு வருசம் எடுத்துக்கொண்டு பின்னரும் நரசிம்மராவ் சொன்னார் " கோப்புகள் காணவில்லை", இதை எந்த காங்கிரஸ்காரன் மறுப்பது ??....


சத்யமூர்த்தி பவனிலிருந்து திருபெரும்புதூர் வரை எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஜெயின் கமிசனிடம் தராமல்மறுத்தது உங்கள் தமிழக காங்கிரசா இல்லையா ?? ...

ஐந்து லட்ச ரூபாயை வாங்கிகொண்டு தனுவை 7 அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி ராஜீவ்கானை நெருங்கவிட்டது உங்கள் காங்கிரஸ் வேட்பாளரா இல்லையா ??

ஒரு 1.5V பேட்டரி வாங்கி தந்ததற்கு தூக்கு என்றால் 2KG RDX தந்தவனை ஏன் கண்டிபிடிக்கவில்லை (ஜெயின் கமிசன்கேட்டதுபோல்). அம்பாக செயல்பட்டவர்களை மட்டும் பிடித்து அவசரமாக கொன்றுவிட்டு, யாரை காப்பாற்ற இந்த முயற்சி??.


தடா என்பது ஒரு முட்டாள்தனமான சட்டம் அதை வைத்து எப்படிவேண்டுமானும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலத்தை வாங்கமுடியும் என்பதுதான் அந்த சட்டத்தை நீக்கியதற்கான முக்கிய காரணம். அப்படி இருக்கும் போது அதே சட்டத்தால் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை வைத்து தண்டனையா ???

தடா சட்டத்தில் வைத்து விசாரித்தால் ராகுல் வின்சியும் (ராகுல் காந்தி / ராகுல்கான்), சோனியாகானும் (சோனியா காந்தி / எட்விகே அந்தோனியா அல்பியா மைனோ) கூட ராஜீவ்கானை தாங்களே கொன்றதாக வாக்குமூலத்தை தருவார்கள் !!!)


அடுத்த கட்சியின் MLA வந்தாலே புகைப்படத்தில் வருவதற்காகவே கூடவே ஒட்டிக் கொண்டு மேடையேறும் காங்கிரஸ்காரர்கள் உங்கள் உயிர் தலைவர் வந்தபோது பம்மிக்கொண்டு பந்தலுக்கடியில் படுத்துகொண்டது ஏன் ??


காங்கிரஸ் மேதாவிகளே பதில் சொல்லுங்கள்!