அலைமகள்..!!
சற்று தொலைவில் கருவாகி,
வரவர மலைபோல் வளர்ந்தும்,
உயர்ந்தும், தாழ்ந்தும், நீண்டும், குறுகியும்
ஏதேதோ சப்தத்துடன், போரிட்டு திரும்பிவரும்
கணவனை நோக்கி ஓடிவரும் மனைவிபோல்
என்னை நோக்கி வேகமாக ஓடிவந்து
காலடியில் உடைந்து நுரையாய் கரைந்துபோகிறாள்
இந்த அலைமகள் - உன்னைப் போல்
சொல்லவந்ததை சொல்லாமலேயே !!
தமிழாய் நிற்க ..!!
அன்பு பந்தலிலே மலர்மாலை சூடிநிர்க்க,
மனமினையும் மணவிழாவின் இவ்வினிய தருணத்திலே,
மலையோடு மனதையும் பரிமாற்றும் வேளையிலே,
ஈருயிரும் ஒருயிராய் இணையுமிந்த காலையிலே
தோட்டம்நிறை பூக்களாய் - அன்பு பெற்றோரும்,
ஆதரவு உறவுகளும், தோள்கொடுக்கும் தோழர்களும் பூத்துநின்று
"வள்ளுவனும் வாசுகியாய் நிலமிசை நீடு வாழ்ந்து
தாரணிபுகழ் தமிழாய் செழித்து நிற்க" - என
வாழ்த்த வரும் அனைவரையும்
வணங்கி நிற்கும் நாங்கள் ..!








