கதை ..!!
இப்போது வந்து கேட்கிறாய் !!
உனக்கு கதை கேட்பதற்கும்
எனக்கு கதை சொல்வதற்குமான
வயது வந்துவிட்டதென்று நினைக்கிறாயா ??
என்ன சொல்வது இப்போது !
தெரியுமா ?
இந்த வயதில் சொல்லும் கதைகள்
சுகப்பிரசவமாவது இல்லை
ரத்தம் தெறிக்க - மனதை
கீரியெடுக்கும்போதுதான்
ஜனித்து தொலைகின்றன.
ஆனாலும்..!
மறைப்பதற்கு ஏதும் இல்லாதபோது சிறிது
சொல்வதற்கும் கதைகள் உள்ளன ..!!
சொல்கிறேன் வா..!!!

No comments:
Post a Comment