எதிர்வினை ..!!
சராசரி வருமானம் மற்றும்
சராசரி பொருளாதாரம் கொண்ட
ஒருவன் அல்லது ஒருவளது
காதலுக்குவரும் எதிர்வினையானது
அவனின் அல்லது அவளின்
சகோதர சகோதரிகளின் எண்ணிக்கைக்கு
நேர்தகவில் இருக்கும் ..!
(புது) ஆர்கிமிடிஸ் ..!!
ஒருவன் தங்குதடையின்றி ஒருவளது காதலில்
மூழ்கியிருக்கும்போது ஏற்படுவதாக தோன்றும்
மனநிம்மதி அல்லது மனமகிழ்ச்சியானது
அவளால் வெளியேற்றபடப்போகும்
மனநிம்மதி அல்லது மனமகிழ்சிக்குச் சமம்...!
ஆலமரம் ..!!
"நம் காதல் ஒரு ஆலமரம்டா" - நம்பப்பட்டது !
அம்மா சொல்லும் கதைகளை அப்படியே
நம்பும் குழந்தைபோல !
ஏன் ஆலமரம்?
இப்போது புரிகிறது.
காலம் நகர
உறவு விழுதுகள் சூழ
வேரற்றுப் போவதாலா ??

No comments:
Post a Comment