போன்சாய் ..!!
வைத்தது என்னனமோ ஆலமரம்தான்..!
அவள் பெற்றோருக்காக ஒரு கிளை
என் பெற்றோருக்காக ஒரு கிளை
அவள் உடன்பிறப்புகளுக்காக ஒரு கிளை
என் உடன்பிறப்புகளுக்காக ஒரு கிளை
சமூகத்திற்கு ஒரு கிளை
சாக்கடை சாதிக்கு ஒரு கிளை
மயிறு மதத்திற்கு ஒரு கிளை
என் பொருளாதாரத்திற்கு ஒரு கிளை
இப்படியாக கிளைகளை வெட்டியபின்
வீட்டுக்குள்
ஒரு ஓரத்தில்
அட்டைபெட்டிக்குள்
"போன்சாய்" மரமாய் மாறிநிற்கிறது - எங்கள் காதல்..
மனைவிக்கு தெரியாமல்..
சத்தியமாய் வைத்தது என்னவோ ஆலமரம்தான்..!

No comments:
Post a Comment