Friday, March 15, 2013

அம்முகுட்டிக்கு PART #17



திராட்சை முந்திரி ..!!
வெடிக்காமல்போன பட்டாசை
எட்டிநின்று ஆராயும் சிறுவன்போல,
அடுத்தநொடி வைத்துள்ள ஆச்சர்யங்களை - எப்போதும் எதிர்கொள்ள தயாராகி நெடுநாட்களாகிவிட்டது
அணைந்திருக்கலாம், வெடிக்கலாம்
அல்லது புஸ்வானமும் ஆகலாம் !!

ஆனாலுமடி
உன்நினைவுகள் எப்போதும்
எதிர்பாராத இனிமையைத் தரவல்லன
பாயசத்தில் ஆங்காங்கே தட்டுப்படும்
திராட்சை, முந்திரி போல ..!!


எதிர்ச்செயல் ..!!
எல்லாவற்றுக்கும் எதிர்ச்செயல் செய்தாய்!
பார்க்காதே - "பார்ப்பேன்"
பேசாதே - "பேசுவேன்"
சிரிக்காதே - "சிரிப்பேன்"
வராதே - "வருவேன்""
தராதே - "தருவேன்"
முத்தமில்லை முத்தமில்லை
“முத்தமுண்டு முத்தமுண்டு முத்தமென்பதுண்டடா”
பாரதிகவி பாடினாய்

கடைசியாக
"விலகிவிடாதே" என்றேன் !

No comments:

Post a Comment