Friday, February 17, 2012

ஆகவே மக்களே !!

நீங்கள் மிகுந்த நாட்டுப்பற்றுடன் ஆவலோடு சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கும் இந்த தருணத்தில் ஒரு இந்திய அரசு அல்லது ஜனாதிபதி அல்லது காங்கிரஸ் அல்லது சோனியா (எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் எல்லா கன்றாவியும் ஒன்றுதான் !!) ஒரு இனிய செய்தியை வெளியிட்டுள்ளது..


அது !!

ராஜிவ் கொலையாளிகள்(?) மூன்று பேரின் கருணை நிராகரிப்பு......

இந்தியர்கள் மகிழ்ந்து கொள்ளலாம் இனி
எத்தனை தமிழர்களையும் துணிந்து கொல்லலாம்,
உங்கள் சட்டத்தின்(?) துணையோடு !!

தமிழர்கள் அனைவரும் சட்டையில் மூவண்ணக்கொடி அணிந்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி தங்களது சுதிந்திர தினத்தை(??) கொண்டாடலாம், ஆழ்ந்த நாட்டுப்பற்றுடன்....


20 ஆண்டுகள் இருட்டறையில் அடைபட்ட எங்களின் உணர்வுகள் என்றோ தூக்கிலிடப்பட்டுவிட்டது, இனி எங்கள் சவத்தை இன்னும் ஒருமுறை தூக்கிலிடுங்கள் மகிழுங்கள், இனிப்புகள் வழங்குங்கள் .......


அதோடு இந்த இந்திய தேசத்தை எதிர்நோக்கி எங்கள் தமிழ்நாட்டிற்கு சில கேள்விகள் உண்டு .....


  • இந்திரா மரணத்தின்போது 5000 சீக்கியர்களை கொலை செய்தவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ??

  • தலைவர்கள் மரணத்தின் போது இதைபோன்ற கொலைகள் சகஜம் என்று சொன்ன ராஜீவ்கான் (எ) ராஜீவ்காந்தியை ஏன் தூக்கிலிடவில்லை ??

  • 7000 தமிழர்களை கொன்று குவித்த இந்திய அமைதிப்படையும் அதை அனுப்பிய ராஜீவ்கான் (எ) ராஜீவ்காந்தியை ஏன் தூக்கிலிடவில்லை ??

  • 150000 தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அத்தனை உதவிகளையும் செய்த இந்தியஅரசை ஏன் தூக்கிலிடவில்லை ??
  • 600 தமிழக மீனவர்களை கொன்றவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ??
  • எங்கள் கச்சத்தீவை திருடி இன்னொருவனுக்கு கொடுத்தவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ?

இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்க உங்கள் சுதந்திர தினம் வேறு வந்துவிட்டது...

மூவண்ணக்கொடி அணியுங்கள்
கொடியேற்றுங்கள்
இனிப்புகள் வழங்குங்கள்
உங்கள் சுதிந்திர தினத்தை கொண்டாடுங்கள்
ஆழ்ந்த நாட்டுப்பற்றுடன்....

ஆகவே மக்களே !!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்
இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்லுங்கள்.
ஆனால் எங்களுக்கு கொஞ்சமும் உணர்வு வந்துவிட்டால்
கூசாமல் தீவிரவாதிகள் என்று சொல்லுங்கள் ...

காங்கிரசே, இதுதானே உன் சாதனைகள் ?



  • அமைதிப்படை என்ற பெயரில் கொலைகார படையை அனுப்பி 8000 தமிழர்களை கொன்றது, பல நூறு தமிழ் பெண்களை சூறையாடியது (போரில் இதெல்லாம் சகஜம், தமிழச்சிகளுக்கு மட்டும்தானா கற்பு என்றது).


  • உங்கள் குடும்ப நட்புக்காக தமிழனின் கச்சத்தீவினை பறித்து சிங்களனுக்கு தாரைவார்த்து, மீனவ தமிழனின் வாழ்வாதாரத்தின் ஆணிவேரை அழித்து அவன் வயிற்றில் அடித்தது (அதன் பயனாக இன்றுவரை 530 மீனவர்களை இழந்துள்ளோம்) - இதே போல காஷ்மீரை விட்டுக்கொடுக்க தயாரா ??


  • அத்தனை உதவிகளையும் சிங்களனுக்கு செய்து 2 லட்சம் (200000) தமிழர்களை கொன்று ஒழித்தது.

  • கொலைகார ராஜ பக்ச்சனுக்கு இரத்தின கம்பள வரவேற்பு அளித்து உபசரிப்பது,

  • ஐ நா, சபையில் சிங்களனுக்கு ஆதரவாக ஓட்டளித்து, தீர்மானம் நிறைவேற்றுவது.

  • ஸ்பெக்ட்ரம் ஊழல் ....

  • போபர்ஸ் ஊழல் ...

  • காமன் வெல்த் ஊழல்...

  • கார்கில் - ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் ...

  • இந்திய நதிநீர் இணைப்பிற்கு எதிர்ப்பு ....

  • 25000 பேர் மரணமடைய காரணமான போபால் விசவாயு ஆண்டர்சனை தப்பவிட்டது..

  • விலைவாசியை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு முதலாளிகளின் நலனில் அக்கறை ....

  • இந்திய வனங்களை முதலாளிகளுக்கு விற்று பழங்குடிகளின் வயிற்றிலும் அடித்து, அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது ...

  • இந்திரா காந்தியின் மரணத்தின் போது, 5000 சீக்கியர்களை கொன்றொழித்தது...

இன்னும் என் இனத்தை என்ன செய்வதாய் உத்தேசம் ??...


- சக்திவேல் லோகநாதன்

இன்னும் எத்தனை தமிழ் ரத்தம் வேண்டும் ??

அற்புதமான அறிவு ஜீவிகள் சொல்வதெல்லாம் இதுதான் “வாழும் நாட்டிலேயே இன்னொரு நாடு கேட்கலாமா ??" என்ன அறிய சிந்தனை ??!!!


10 வருடங்களாக குடியிருக்கும் உன்னை, 15 வருடங்களாக குடியிருக்கும் உன் அண்டை வீட்டுக்காரன் அடித்து துரத்தினால் என்னசெய்வாய் ??, அவனை பொறுத்தவரை நீ அவனுக்கு பின் வந்தவன் தானே !!


சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் உலகில் இருந்த நாடுகள் எத்தனை, இப்போது இருப்பவை எத்தனை ??, எப்படி வந்தன இத்தனை நாடுகள்?? நாம் ஏன் மொழிவாரிய மாநிலங்களாக நாட்டை பிரித்து வைத்துக்கொண்டோம் ??. வெவ்வேறு மொழி பேசுபவர்களுக்கு வெவ்வேறு பழக்க வழக்கங்கள் இருக்கும் என்பதால்.. அதனால் எதிர் காலத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்பதற்காக.... ஆனால் வெவ்வேறு மொழி, வெவ்வேறு பழக்க வழக்கங்கள், வெவ்வேறு கலாச்சராம், வெவ்வேறு மதம் கொண்டவர்களை கூசாமல் சேர்ந்து வாழச்சொல்கிறோம், அதுவும் உயிரோடு கொல்பவனுடன் ?!! முதலில் நம்மால் முடிந்ததா??!!



குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும், வயதானவர்களையும், அப்பாவி மக்களையும் கொல்வதை நீங்கள் தடுக்கவில்லை...,
ஆனால்,
என் வரிபணத்தில் என் மக்களை கொல்வதற்கு உதவியதேன்?

ராணுவ உதவிகள் ஏன் ?
கப்பல்கள் ஏன் ?
ராடார்கள் ஏன் ?
பாஸ்பரஸ் குண்டுகள் ஏன் ?
க்ளஸ்டர் குண்டுகள் ஏன் ?
ஆயுதங்கள் ஏன் ?
அவ்வளவு மிகுந்து விட்டதா என் வரிப்பணம் ?
இதற்காகத்தானா உங்களை தேர்ந்தெடுத்தோம் ?

தமிழனை தவிர மற்றவன் ஏதாவது நாடுகளில் சிறிதாக அடிபட்டாலும் எத்தனை கேள்விகள், எத்தனை ஆர்பாட்டங்கள், எத்தனை கண்டனங்கள், எத்தனை விசாரணைகள்... !!! ஆனால் தமிழ் இனத்தை அழிப்பவனுக்கு அத்தனை உதவிகளையும் செய்துவிட்டு நாங்கள் கொடுரமாய் சாவதை பார்த்து பார்த்து விஷமமாய் சிரிப்பதன் காரணம் என்ன ??
தமிழன் இந்தியன் இல்லையா, அல்லது தமிழன் மனிதனே இல்லையா ???