நீங்கள் மிகுந்த நாட்டுப்பற்றுடன் ஆவலோடு சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கும் இந்த தருணத்தில் ஒரு இந்திய அரசு அல்லது ஜனாதிபதி அல்லது காங்கிரஸ் அல்லது சோனியா (எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் எல்லா கன்றாவியும் ஒன்றுதான் !!) ஒரு இனிய செய்தியை வெளியிட்டுள்ளது..
அது !!
ராஜிவ் கொலையாளிகள்(?) மூன்று பேரின் கருணை நிராகரிப்பு......
இந்தியர்கள் மகிழ்ந்து கொள்ளலாம் இனி
எத்தனை தமிழர்களையும் துணிந்து கொல்லலாம்,
உங்கள் சட்டத்தின்(?) துணையோடு !!
எத்தனை தமிழர்களையும் துணிந்து கொல்லலாம்,
உங்கள் சட்டத்தின்(?) துணையோடு !!
தமிழர்கள் அனைவரும் சட்டையில் மூவண்ணக்கொடி அணிந்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி தங்களது சுதிந்திர தினத்தை(??) கொண்டாடலாம், ஆழ்ந்த நாட்டுப்பற்றுடன்....
20 ஆண்டுகள் இருட்டறையில் அடைபட்ட எங்களின் உணர்வுகள் என்றோ தூக்கிலிடப்பட்டுவிட்டது, இனி எங்கள் சவத்தை இன்னும் ஒருமுறை தூக்கிலிடுங்கள் மகிழுங்கள், இனிப்புகள் வழங்குங்கள் .......
அதோடு இந்த இந்திய தேசத்தை எதிர்நோக்கி எங்கள் தமிழ்நாட்டிற்கு சில கேள்விகள் உண்டு .....
- இந்திரா மரணத்தின்போது 5000 சீக்கியர்களை கொலை செய்தவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ??
- தலைவர்கள் மரணத்தின் போது இதைபோன்ற கொலைகள் சகஜம் என்று சொன்ன ராஜீவ்கான் (எ) ராஜீவ்காந்தியை ஏன் தூக்கிலிடவில்லை ??
- 7000 தமிழர்களை கொன்று குவித்த இந்திய அமைதிப்படையும் அதை அனுப்பிய ராஜீவ்கான் (எ) ராஜீவ்காந்தியை ஏன் தூக்கிலிடவில்லை ??
- 150000 தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அத்தனை உதவிகளையும் செய்த இந்தியஅரசை ஏன் தூக்கிலிடவில்லை ??
- 600 தமிழக மீனவர்களை கொன்றவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ??
- எங்கள் கச்சத்தீவை திருடி இன்னொருவனுக்கு கொடுத்தவர்களை ஏன் தூக்கிலிடவில்லை ?
இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்க உங்கள் சுதந்திர தினம் வேறு வந்துவிட்டது...
மூவண்ணக்கொடி அணியுங்கள்
கொடியேற்றுங்கள்
இனிப்புகள் வழங்குங்கள்
உங்கள் சுதிந்திர தினத்தை கொண்டாடுங்கள்
ஆழ்ந்த நாட்டுப்பற்றுடன்....
கொடியேற்றுங்கள்
இனிப்புகள் வழங்குங்கள்
உங்கள் சுதிந்திர தினத்தை கொண்டாடுங்கள்
ஆழ்ந்த நாட்டுப்பற்றுடன்....
ஆகவே மக்களே !!
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்
இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்லுங்கள்.
ஆனால் எங்களுக்கு கொஞ்சமும் உணர்வு வந்துவிட்டால்
கூசாமல் தீவிரவாதிகள் என்று சொல்லுங்கள் ...
இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்லுங்கள்.
ஆனால் எங்களுக்கு கொஞ்சமும் உணர்வு வந்துவிட்டால்
கூசாமல் தீவிரவாதிகள் என்று சொல்லுங்கள் ...
No comments:
Post a Comment