- அமைதிப்படை என்ற பெயரில் கொலைகார படையை அனுப்பி 8000 தமிழர்களை கொன்றது, பல நூறு தமிழ் பெண்களை சூறையாடியது (போரில் இதெல்லாம் சகஜம், தமிழச்சிகளுக்கு மட்டும்தானா கற்பு என்றது).
- உங்கள் குடும்ப நட்புக்காக தமிழனின் கச்சத்தீவினை பறித்து சிங்களனுக்கு தாரைவார்த்து, மீனவ தமிழனின் வாழ்வாதாரத்தின் ஆணிவேரை அழித்து அவன் வயிற்றில் அடித்தது (அதன் பயனாக இன்றுவரை 530 மீனவர்களை இழந்துள்ளோம்) - இதே போல காஷ்மீரை விட்டுக்கொடுக்க தயாரா ??
- அத்தனை உதவிகளையும் சிங்களனுக்கு செய்து 2 லட்சம் (200000) தமிழர்களை கொன்று ஒழித்தது.
- கொலைகார ராஜ பக்ச்சனுக்கு இரத்தின கம்பள வரவேற்பு அளித்து உபசரிப்பது,
- ஐ நா, சபையில் சிங்களனுக்கு ஆதரவாக ஓட்டளித்து, தீர்மானம் நிறைவேற்றுவது.
- ஸ்பெக்ட்ரம் ஊழல் ....
- போபர்ஸ் ஊழல் ...
- காமன் வெல்த் ஊழல்...
- கார்கில் - ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் ...
- இந்திய நதிநீர் இணைப்பிற்கு எதிர்ப்பு ....
- 25000 பேர் மரணமடைய காரணமான போபால் விசவாயு ஆண்டர்சனை தப்பவிட்டது..
- விலைவாசியை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு முதலாளிகளின் நலனில் அக்கறை ....
- இந்திய வனங்களை முதலாளிகளுக்கு விற்று பழங்குடிகளின் வயிற்றிலும் அடித்து, அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது ...
- இந்திரா காந்தியின் மரணத்தின் போது, 5000 சீக்கியர்களை கொன்றொழித்தது...
இன்னும் என் இனத்தை என்ன செய்வதாய் உத்தேசம் ??...
- சக்திவேல் லோகநாதன்
No comments:
Post a Comment