மரங்கொத்தி ..!!
மதத்தை மரிக்கவைத்து, சாதியை சாம்பலாக்கி
உன்னைநான் நெருங்க செய்தது
ஆண்டாண்டுகாலமாய் வளர்ந்து
அசுரனாய் நிற்கும் ஆலவிருட்சத்தை
அலகால் பிளந்துவிடத் துடிக்கும்
அபலை மரங்கொத்தியின்
அற்ப முயற்சி ..!!ஒரு உண்டியல் ..!!
ஒரு உண்டியல் உள்ளது !
கன்னக்குழி இருட்டினை
மான்விழி பார்வையை
மயில்தோகை கூந்தலை
மடிதுயில் உறக்கத்தை
'மை'கரைசூழ் கண்ணீரை
பாடிய வளையல்களை
கொஞ்சிய கொலுசுகளை
கேள்விகுறி காதுகளை
நங்கூர நக ஒளியை
சிரித்ததை - சிணுங்கியதை
கொடுத்ததை - கேட்டதை - வாங்கியதை
எல்லாம் வைத்துள்ளேன் அதில்..!
வயல்வெளியும் வறண்டிருக்கும்
கடுங்கோடை பெருவெளியில்
கண்ணிமையும் கருகிப்போகும்
கடும்பஞ்ச நாட்களில்
உயிர்கொடுத்து உதவும் எனக்கு ..!!

No comments:
Post a Comment