மனமாடுகள் ..!!
பழக்கப்பட்ட பாதை,
பழக்கப்பட்ட மாடுகள்,
வண்டிக்காரன் தூங்கினாலும்
வழக்கம்போல கொண்டுசேர்க்கின்றன
இம் மனமாடுகள் .
அவளிடமே ...!
நானும் நாமும் ..!!
நாமாக நாமிருந்தபோது
நீயாக நானிருந்தேன்,
நானாக நீயிருந்தாய்,
நீயாக நீ சென்றுவிட்டாய்
நானாக நானிருக்கிறேனா ?
நானாகி ..!!
நிலவும் தென்றலும்
இல்லாமல் போனால் - இந்த
கவிதை எழுதுபவனுங்க என்னாவான்கள் ?
பயம்தான் !!
நீ இல்லாமல்போன நானாகிப்போவான்களோ ?!

No comments:
Post a Comment