நாமமும் பட்டையுமோ
ரடையாலமென் றதனைத்துறந்து
தொப்பியுந்
தாடியுமோ ரடையாலமென் றதனையுந்துறந்து
வெள்ளங்கிச் சிலுவையும் அல்லேலூயா வேதமும்
ருத்திராசைக்
காவியும் கொண்டைமுடி மந்திரமும்
தாடியற்ற
மீசையும் மீசையொடு தாடியும்
எல்லாமோ ரடையாலமென்
றனைத்துந் துறந்து
*கருவில்
தரித்த திருவுங் கொண்டு
*ஆடையின்றி
வாடைமெலிந்து கையதுகொண்டு மெய்யதுபொத்தி
*நல்லதைக்
கொண்டு அல்லதைத் தள்ளி
*இறுதி வறினும்
உறுதி கூறி
*பணி மூப்பு
சாக்காடு வென்று
*ஆக்கி யளித்து
அளித்துப் புரந்து
*பூதலமும்
மீதலமும் போற்ற
புரவியேறி
வருகையிலே புதியதொரு ஞானம்
அடையாளந்
துறத்த லின்னுமோ ரடையாளம்
சக்திவேல் லோகநாதன்
* - தமிழில் பயன்படுத்தப்படும் தொடர்ச் சொற்கள் -
No comments:
Post a Comment