Sunday, February 17, 2013

அம்முகுட்டிக்கு PART #15




ஆச்சர்யக்கு(றி)ழி ..!
உன் கன்னக்குழியில் மட்டும் நடக்கும் அதிசயம்
ஒரு முற்றுப்புள்ளி ஆச்சர்யகு(றி)ழி ஆவது ..!!


வெறுமை ..!!
இன்று அம்மாவாசை
ஆம்,
இன்று அவள் ஊருக்கு போய்விட்டாள்


ஒன்னூமில்ல ..!!
நீ சொல்லும் "ஒன்னூமில்ல ஒன்னூமில்ல"
ராகத்திற்காகவே நான் ஒன்னூமில்லாமலேயே
போய்விடலாம் போ !


சிறகில்லாமல் பறப்பேன் என்றேன்
நம்ப மறுக்கிறான் நண்பன்.
ஒருமுறை என்னைபார்த்து சிரியேன்
பறந்து காட்டிவிடுகிறேன் அவனுக்கு !!


பருவநிலை மாற்றம் ..!!
"கொஞ்ச காலமாக பருவநிலை கண்டபடி மாறுகிறது"
வானிலை ஆராய்ச்சி சொல்கிறது.
இதை அவர்கள் என்ன சொல்வது
நானே சொல்வேனே ..!


அனுசரிப்பு ..!!
விற்கின்ற விலைவாசியில்,
இருவருக்கும் கட்டில்,
இருவருக்கும் மெத்தை,
இருவருக்கும் போர்வை,
இருவருக்கும் தலையணை எதற்கடி ?.
ஒருவருக்கு மட்டுமே வாங்குவோம்
இருவருமே அதில் அனுசரித்துகொள்வோம்,
என்னசொல்கிறாய்?

No comments:

Post a Comment