Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #14



விபத்துக்கள் ..!!
மறுபடியும் சிரித்துக்கொண்டு
சாலையோரம் நடக்காதேடி,
ஏற்கனவே நடந்த விபத்துக்களுக்கெல்லாம்
நீதான் காரணம் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்களாம் !


பூ வலி ..!!
பேனாவை அழுத்தமாய் பிடித்து எழுதாதேடி
உனக்கு வலிக்கும் என்று ரத்தகண்ணீர் விட்டு
சிவப்பாய் எழுதுகிறது பார் !!
நீலமை ஊற்றியும் கூட


பூ வலி - 2 ..!!
ஒருமுறை அடிக்க வந்தார் அம்மா
ஆவேசம் வந்துவிட்டது எனக்கு, பயந்து போனார்.
என்னை நீ அறைந்தேவிட்டாய்
பதறி போய்விட்டேன்
"கை வலிக்கபோகுதடி !!"

  சொத்துவரி ..!!
உன் அப்பாவிடம் சொல்லடி
அரசாங்கத்தை ஏமாற்றவேண்டாம் என்று
பின்னே,
உன்னை வீட்டில் வைத்துக்கொண்டு
"சொத்துவரி" கட்டுவதே இல்லையாமே !


உயிர்ப்பு ..!!
அணைத்து அணைத்து வைத்தாலும்
அதுவாக உயிர் பெறுகிறது
என் அலைபேசி
நீ அழைக்கும் போது...!

No comments:

Post a Comment