திணை ..!!
தமிழ் இலக்கணம் சொல்கிறது
மணலும் மணல் சேர்ந்த இடமும் - பாலை
நான் சொல்கிறேன்
அவளும் அவள் சேர்ந்த இடமும் - சோலை
இனிப்பு பாகற்காய் ..!!
"அம்மு வீட்டு பாகற்காய் இனிக்கிறது"
ஊரெல்லாம் ஒரே பேச்சு.
எனக்குத்தானே தெரியும் ஏனென்று
நீ தொட்டுத்தொட்டு பறிக்கிராயே
அங்கு வந்ததடி இனிப்பு அதற்கு !
ஒளிவட்டம் ..!!
ஒருமுறை வானத்தில் பறக்கும்போது
உன்வீட்டை கண்டுகொண்டேன்
அதை சுற்றி இருக்கும்
ஒளிவட்டத்தை வைத்து !
குழப்பம் வரும் ..!!
கோவிலுக்கு போ, ஆனால்
வெளியில் நின்று வேண்டிவிட்டு வந்துவிடு
உள்ளே போகாதே.
எந்த சிலைக்கு தீபம் காட்டுவது என்று
குழப்பம் வரும் ஐயருக்கு

No comments:
Post a Comment