தீர்த்தம்..!!
காசி கடக்கும் கங்கை நீரையோ,
ராமேஸ்வரம்சூழ் கடல் நீரையோ
அல்லது
அவள் குடித்துவைத்த மீதநீரையோ
கொண்டு செய்யப்படுகிறது ..!!
முறையீடு ..!!
கொஞ்சும் பார்வையை வீசு
பற்றி எரியட்டும் - இந்த பச்சைமரம்.
கொஞ்சம் அழகைகாட்டு
அடங்கிபோகட்டும் - இந்த ஆவேச அலை.
காதலனாகினாய்,
உன் கனவுகளுக்கு காவலனாகினாய்,
கவிஞன் ஆக்கினாய்,
கணவனாகத்தான் வாய்க்கவில்லை
கல்லறையாகவாவது விடேன்.
கொலுசுகளையாவது கொடு ..!!
உறங்க நேரமாகிவிட்டது ஆனாலும்
நாளை சீக்கிரம் எழவேண்டும்,
காலைவரை கனவுகளை கொடு
இல்லையானால் கால் கொலுசுகளையாவது கொடு
எழுப்பிவிடட்டும் என்னை - நான் உறங்கினால்

No comments:
Post a Comment