Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #12



சொல்லிவை ..!!
உன் நினைவுகளுக்கு சொல்லிவையடி
நாய்க்குட்டி போல் என்னையே
சுற்றி சுற்றி வருகிறது,
கொஞ்சம் ஏமார்ந்தாலும் கூட
முகத்தை நக்கிவிட்டு ஓடிவிடுகிறது !!


மாற்றம் ..!!
நண்பர்களாக இருந்தோம்,
அப்போது சொன்னாய்,
"அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு தெரியாமல்
திருமணம் செய்து கொண்டார்கள்
நானாவது அப்படி கூடாது".
காதல் வந்த பிறகு கேட்கிறாய்
"அவர்கள் செய்தால் சரி,
நாம் செய்தால் தவறா?"


வாசம் ..!!
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
வாசம் உண்டடி என்றேன்.
என் கணவனின் அறிவே அறிவு என்றாய்.
திடீரெண்டு கோபப்பட்டு
அதெப்படி உங்களுக்கு தெரியும் என்கிறாயே
எப்படி விளக்குவது உனக்கு
எல்லா பூவுக்கும் வாசம் உண்டென்பதை.

No comments:

Post a Comment