Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #9



அச்சச்சோ ..!!
நமக்கு பிறக்கும்
இரண்டாவது பெண் குழந்தைக்கு
என் அம்மா பெயரையும்,
மூன்றாவது பெண் குழந்தைக்கு
உன் அம்மா பெயரையும் வைக்கலாம் என்றேன்
"அச்சச்சோ...." என்றாய்
கண்ணம் சிவக்க வெட்கப்பட்டு
அன்று புரிந்ததடி எனக்கு
இந்த பெண்கள் சொல்லும் "அச்சச்சோ"வின் அர்த்தம்!


சாபம் ..!!
கடிக்கிற சாக்கில்
உன்கன்னதில் முத்தமிடும்
அந்த கொசு இனமே
இன்றோடு அழிந்து போகட்டும்.
வயிற்றெரிச்சலில் சாபமிடுகிறேன் நான் !!


பெயர் ..!!
"காதல்கதை கொண்ட படத்திற்கு
பெயர் ஒன்று சொல்லு" என்றார்கள்
உன்பெயர் சொன்னேன்.
"அடிதடி சண்டை படத்திற்கு
பெயர் ஒன்று சொல்லு" என்றார்கள்
வேறென்ன ?
உன் அப்பா பெயர்தான் !!

No comments:

Post a Comment