Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #8



கூட்டத்தை பார் ..!!
சூரியன் உதிக்கும்போது - வெளிய
நிற்காதேன்னு எத்தனமுறை சொல்வது
சூரிய உதயத்தையும் நிலவையும்
ஒன்றாகப்பார்க்க கூட்டத்தைப்பார் வாசலில் ..!!


வரமும் சாபமும் ..!!
எனக்கு போட்டியாக - உன்
காதருகே சிரிக்கும் மச்சத்தை
மிச்சமில்லாமல் தின்று விடட்டுமா?
நித்தம் நித்தம் சத்தமாக
முத்தமிட்டு மொத்தமாக செத்துவிடட்டுமா !!
துப்பட்டா மடிப்பில் தொலைவதற்கு வரம்கொடு
அல்லது,
கன்னக்குழியில் கரைவதற்கேனும் சாபமிடு


உதயம் ..!!
சூரியன் உதிக்கும் திசை
தெற்கு !
அந்த திசையில்தானே
உன்வீட்டு வாசல் இருக்கிறது !!

 மாடல் ..!!
சிற்பம் செய்யும் நண்பரை கேட்டேன்
"என்ன செய்கிறீர்கள்?"
சொன்னார்,
"மனைவியை மாடலாக வைத்து
மகாலட்சுமி சிலை செய்கிறேன்"
கேட்டார்,
"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
சொன்னேன்,
மகாலட்சுமியையே மாடலாக வைத்து
மனைவியை தேடிக்கொண்டு இருக்கிறேன் ..!!


நினைத்த போதெல்லாம் ..!!
மொட்டை மாடியில் உறங்கும்போது
"கண்ணை கூசுகிறதே இதை யாராவது
ஊதி அணைத்து விடுங்களேன் " என்று
நிலவை பார்த்து சொன்னாயாமே !
அது என்ன என் அம்முவா ?
நினைத்த போதெல்லாம் அணைக்க !


திருந்தட்டும் சிலைகள் !!
ஒரு முறை கோவில் பக்கம் வா
திருந்தட்டும் அந்த கர்வம் பிடித்த சிலைகள்!!

No comments:

Post a Comment