Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #11



பாவம் ..!!
காரத்தின் மீது தீராத காதல் எனக்கு
"கடுகு காரத்திற்கே கண்ணீர் விடுவேன்"
என்கிறாய் நீ
இன்றோடு தொலைத்தேன்போ காரத்தை
அடி அம்முக்குட்டி,
புலி புல்லைத்தின்பது பாவமல்லடி
அணில் அசைவம் தின்பதுதான் பாவம்.


தன்மானம் துறப்பு ..!!
காக்கைக்கு சோறு வைக்காதே என்றேன் கேட்டாயா,
இப்போது பாரடி,
குயில்கள் கூட தன்மானம் துறந்து
"கா...கா.." என்று கரைவதை
நீ வைக்கும் சோற்றுக்காக ..!!


கொஞ்சம் சொல்லேன் ..!!
வீட்டிற்கு போனால் அம்மா கேட்பாள்
"இத்தனை வருஷமாய் கூடவே இருந்ததை
மறந்து தொலைத்துவிட்டாயே" என்று.
உன்னோடு பேசிக்கொண்டே இருந்ததில்
என்பெயர் மறந்து போனதடி
கொஞ்சம் சொல்லேன்.

No comments:

Post a Comment